பன்னாட்டுப் பழங்குடியினர் தின சிறப்பிதழ் - பழங்குடியினர் வாழ்வியல் மாற்றங்கள்

International Research Journal of Tamil பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ் ISSN: 3139– 1893 Boomi An International open Access, Peer- reviewed, Refereed Quarterly Journal பன்னாட்டுப் பழங்குடியினர் தின சிறப்பிதழ் பழங்குடியினர் வாழ்வியல் மாற்றங்கள் பழங்குடிகள் என்போர் தொன்றுதொட்டோ பன்னெடுங்காலமாகவோ (10,000 ஆண்டுகளுக்கும் மேலாக), ஒரு நிலப்பகுதியில் வாழ்ந்து வருபவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி பழக்க வழக்கங்களும் மொழியும் நிலமும் கொண்டு அதனைச் சார்ந்த செடி, கொடி, மரம், விலங்குகளைக் கொண்டு தங்கள் வாழ்க்கையைத் தன்னிறைவோடு வாழ்பவர்கள். இவர்கள் தங்களுக்கென தனி கலைகளும், கடவுள், சமயம் மற்றும் உலகம் பற்றிய கொள்கைகளும் கொண்டிருப்பர். தனி மனித வாழ்க்கையிலும், உறவு முறைகளிலும், குமுகமாக வாழ்வதிலும் தங்களுக்கென தனியான முறைகள் கொண்டவர்கள். தற்கால மக்களிடம் அதிகம் பழகாமலும், பணத்தை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரம் இல்லாமலும், தற்கால தொழில் வளர்ச்சி வழி பெற்ற புதிய பொருட்கள், வசதிகள் எதையும் பெரிதாக ஏற்றுக் கொள்ளாதவர்களுமாக இருக்கின்றனர். ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, இந்தியாவின் அந்தமான் நிக்கோபர் தீவுகள், இந்தோனேசியா, ஜப்பான், பசிபிக் தீவுகள் என்று உலகின் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பழங்குடி இனங்கள் வாழ்ந்து வருகின்றனர். பன்னாட்டு உலக பழங்குடிகள் நாள் (International Day of the World's Indigenous Peoples) உலகம் முழுவதும் 90 நாடுகளில் சுமார் 476 மில்லியன் பழங்குடி மக்கள் வாழ்கின்றனர். இவர்கள் 5,000-க்கும் மேற்பட்ட வெவ்வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள். உலகப் பழங்குடியின மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 9 அன்று அனுசரிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற உலகப் பிரச்சினைகளை மேம்படுத்த பழங்குடியினர் செய்யும் சாதனைகளையும் பங்களிப்புகளையும் இந்த நிகழ்வு அங்கீகரிக்கிறது. 1982-இல் மனித உரிமைகளை மேம்படுத்துதல், பாதுகாத்தல் ஆகியவற்றிற்கான துணை ஆணையத்தின் பழங்குடி மக்கள்தொகைக்கான ஐ.நா பணிக்குழுவின் முதல் கூட்டம் நடைபெற்ற நாளைக் குறிக்கும் வகையில், இந்நாள் திசம்பர் 1994 இல் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் முன்மொழியப்பட்டு, 2007 செப்டம்பர் 13 அன்று ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த பின்புலத்தில் பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ் உலகப் பழங்குடிகளின் வாழ்வியல் மாற்றங்களை ஆவணப்படுத்தும் நோக்குடன் பழங்குடியினர் வாழ்வியல் மாற்றங்கள் என்னும் பொருண்மையில் சிறப்பிதழ் வெளியிட உள்ளது. உலகின் முக்கிய பழங்குடியின மக்கள்  எஸ்கிமோக்கள் (Eskimos): கிரீன்லாந்து, கனடா மற்றும் அலாஸ்கா போன்ற மிகக் குளிரான பிரதேசங்களில் வாழும் மக்கள்.  பிக்மிஸ் (Pygmies): ஆப்பிரிக்காவின் காங்கோ படுகையில் வாழும் குள்ளமான பழங்குடியின மக்கள்.  மசாய் (Maasai): கிழக்கு ஆப்பிரிக்காவின் (கென்யா, தான்சானியா) சவானா புல்வெளிகளில் வாழும் கால்நடை வளர்ப்போர்.  புஷ்மென் (Bushmen): ஆப்பிரிக்காவின் கலஹாரி பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவர்கள்.  மாவோரி (Maori): நியூசிலாந்தின் பூர்வகுடி மக்கள்.  ஆபொரிஜன்கள் (Aborigines): ஆஸ்திரேலியாவின் பூர்வகுடிகள்.  முர்சி பழங்குடியினர் (Mursi) என்பவர்கள் ஆப்பிரிக்க நாடான எத்தியோப்பியாவின் கீழ் ஓமோ பள்ளத்தாக்கில் (Lower Omo Valley) வாழும் ஒரு தனித்துவமான பூர்வகுடி இனக்குழுவினர் ஆவர். முர்சி பழங்குடியினர் மாடுகளை மேய்த்தும், வெள்ளப்பெருக்கைப் பயன்படுத்தி சிறு விவசாயம் செய்தும் வாழும் இவர்கள், உலகிற்குத் தங்கள் பாரம்பரிய கலாச்சாரத்திற்காக மிகவும் அறியப்படுகின்றனர்  ஜாரவாக்கள் (Jarawas) & சென்டினலீஸ் (Sentinelese): இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினர். இந்தியப் பழங்குடிகள் இந்தியாவில் 705-க்கும் அதிகமான பழங்குடியின சமூகங்கள் உள்ளன, இவர்கள் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 8.6% (10.4 கோடி மக்கள்) ஆக உள்ளனர். இவர்கள் மலைகள் மற்றும் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் தங்கள் பாரம்பரிய கலாச்சாரம், மொழி மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையைப் பின்பற்றி வாழ்கின்றனர். முக்கிய பழங்குடியினங்கள்  பீல் (Bhil): இந்தியாவின் மிகப்பெரிய பழங்குடியினக் குழு. இவர்கள் முக்கியமாக மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் குஜராத் மாநிலங்களில் வாழ்கின்றனர். கோண்டு  கோண்டு (Gond): மத்திய இந்தியாவில் பரவலாக வாழும் இவர்கள், கலை மற்றும் கைவினைப் பொருட்களுக்குப் பெயர் பெற்றவர்கள்.  சந்தால் (Santhal): ஜார்கண்ட், ஒடிசா மற்றும் மேற்கு வங்காளப் பகுதிகளில் வாழும் இம்மக்கள், சிறந்த நாட்டுப்புற இசை மற்றும் போராட்ட உணர்வைக் கொண்டவர்கள்.  நாகா (Naga): நாகாலாந்து, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் வாழ்கின்றனர். புகழ்பெற்ற 'ஹார்ன்பில்' (Hornbill) திருவிழாவை நடத்துகின்றனர். தமிழ்நாட்டுப் பழங்குடிகள் தமிழகத்தில் 37- பழங்குடி இன மக்கள் மலை மற்றும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்கின்றனர். தனித்துவமான மொழி, வாய்மொழி இலக்கியம் மற்றும் இயற்கை வழிபாட்டு முறைகளைக் கொண்டுள்ளனர். தமிழக அரசின் பழங்குடியினர் நலத்துறை இவர்களின் மேம்பாட்டிற்கான திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பழங்குடியினர் பட்டியல் 1. அடியன் (Adiyan), 2. அரநாடன் (Aranadan), 3. இரவாளன் (Eravallan), 4. இருளர் (Irular), 5. காடர் (Kadar), 6. கம்மாரா (Kammara), 7. காணிக்காரன் / காணிக்கர் (Kanikaran), 8. கணியன் (Kaniyan), 9. கட்டு நாயக்கன் (Kattu Naickan), 10. கொச்சுவேலன் (Kochuvelan), 11. கொண்டா கபுஸ் (Konda Kapus), 12. கொண்டா ரெட்டி (Konda Reddi), 13. கோரகா (Koraga), 14. கோட்டா (Kota), 15. குடியா (Kudiya), 16. குறிச்சன் (Kurichchan), 17. குரும்பா (Kurumba),18. குருமன்ஸ் (Kurumans), 19. மகா மலசர் (Maha Malasar), 20. மலை அரையன் (Malai Arayan), 21. மலை பண்டாரம் (Malai Pandaram), 22. மலை வேடன் (Malai Vedan), 23. மலக்குரவன் (Malakkuravan), 24. மலசர் (Malasar), 25. மலையளி (Malayali), 26. மலையகண்டி (Malai Arayan), 27. மன்னன் (Mannan), 28. முதுகர் (Mudugar), 29. முளுவன் / முதுவன் (Muthuvan), 30. பள்ளேயன் (Palleyan), 31. பள்ளியன் (Palliyan), 32. பள்ளியர் (Palliyar), 33. பனியன் (Paniyan), 34. சோளகர் (Sholagar), 35. தோடர் (Toda), 36. ஊராளி (Urali), 37. நரிக்குறவர் மற்றும் குருவிக்காரன் (Narikoravan / Kuruvikkaran) பத்ம விருது பெற்ற இருளர் பழங்குடியினர் - வடிவேல் கோபால், மாசி சடையன் பாரம்பரியமும் தற்கால நிலையும் பழங்குடியின மக்கள் பூமியின் நிலப்பரப்பில் 28%-ஐ நிர்வகித்து வருகின்றனர். மேலும், பூமியின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதில் இவர்களின் பங்கு அளப்பரியது. எனினும், நவீனமயமாக்கல், காடழிப்பு மற்றும் இடப்பெயர்வு போன்ற காரணங்களால் இவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் தரமான ஆய்வுக் கட்டுரைகள் அளித்து நல் ஆதரவு தருமாறு பணிவோடு வேண்டுகிறோம். பன்னாட்டு பழங்குடிகள் தின சிறப்பிதழ்  காலாண்டு ஆய்விதழாக வெளிவரும் எங்களின் பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ்(ISSN: 3139– 1893) என்னும் Peer review ஆய்விதழில் பன்னாட்டுப் பழங்குடிகள் தினத்தன்று(ஜூன் 23, 2026) சமூகத்தில் கைம்பெண்கள் என்னும் சிறப்பிதழ் வெளியிட உள்ளோம். இதழுக்கான ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம்.  ஆய்வுக் கட்டுரைகள் உலக அளவில் உள்ள பழங்குடிகளைக் குறித்து அமையலாம். தற்கால இலக்கியங்கள், பழங்குடிகளின் தற்கால வாழ்வியல், கல்வி, பொருளாதாரம், இருப்பிடம், வேலை வாய்ப்பு, அரசின் திட்டங்கள், காடுகளின் இன்றைய நிலை, பழங்குடிகள் வாழ்வியல் மேம்பாட்டிற்குச் செய்யவேண்டுவன, பழங்குடிகளிடம் நேர்காணல் முதலிய பழங்குடிகள் வாழ்வியல் தொடர்பான அனைத்து பொருண்மைகளிலும் கட்டுரைகள் அமையலாம்.  கட்டுரைகள் ஆய்வு நெறிப்படி யுனிக்கோடு எழுத்துருவில், புதிய களத்தில் புதிய நோக்கோடு எழுதப்படும் தரமான ஆய்வுக் கட்டுரைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.  கட்டுரைகள் 5 முதல் 7 பக்கங்கள் வரை அமைதல் வேண்டும்.  கட்டுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதலாம்.  எங்கள் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும்.  கட்டுரையாளர் பெயர் முகவரி(அலைப்பேசி, மின்னஞ்சல் அவசியம் பதிவிடவும்), ஆய்வுச்சுருக்கம், திறவுச்சொற்கள், கட்டுரை, துணைநூற்பட்டியல் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.  கட்டுரைகளை editorsbirjt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.  தாங்கள் கட்டுரையை மட்டும் மேலுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன் பிறகே வெளியீட்டுக் கட்டணம் செலுத்தவேண்டும்.  சர்வதேச கைம்பெண்கள் தின சிறப்பிதழ்- 2026 இதழுக்கான கட்டுரை அனுப்ப கடைசி தேதி: 27.07.2026  ஆசிரியர்குழு தேர்ந்தெடுத்தக் கட்டுரைகள் மட்டும் இணையத்தில் வெளியிடப்பெறும். மற்றும் இதழ் பிரிண்ட் இதழாகவும் வெளியிடப்பெறும். இதழ் மற்றும் சான்றிதழ் கட்டணமாக, ஆய்வாளார்கள் ரூ. 700/- பேராசிரியர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ரூ. 850/- யும் கட்டணமாக செலுத்தவேண்டும்.  இதழையும், சான்றிதழையும் கூரியரில் பெற விரும்புவோர் கட்டணத்துடன் ரூ. 150/- சேர்த்து அனுப்பவும்.  புலனக் குழுவில் இணைய https://chat.whatsapp.com/DcC86lnpXOY6Vf75p7ON3B மேலும் தகவல் அறிய இணையதளம் : www.boomiirjt.com மின்னஞ்சல்: editorsbirjt@gmail.com தொடர்புக்கு முனைவர் கி. அய்யப்பன் - 9962660279, பதிப்பாளர்: ம. அனிதா எம்.ஏ., எம்.ஃபில்., - 8940872100

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

காலந்தோறும் காதலும் மணமும் - முனைவர் கி. அய்யப்பன்

திருநங்கையர் கலையும் வாழ்வும் - அரிய கலை நூல் பதிப்பு - முனைவர் கி. அய்யப்பன்

கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்