இடுகைகள்

மார்ச், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி - கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்

படம்
  அணிந்துரை முனைவர் கி. அய்யப்பன் தமிழ்த் துறை, உ. நா. அரசினர் கல்லூரி, பொன்னேரி- 601204 கைப்பேசி: 9962660279 இந்த மண்ணில் எழுதப்படுகிற, படைக்கப்படுகிற அல்லது உருவாகப்படுகிற எல்லா கலை இலக்கிய, கலாச்சார மேன்மைகளுக்கும் மக்கள்தாம் அதிபதிகள். அவர்களுக்குப் போய்ச் சேராத எதுவும், அது எத்தகைய உன்னதமானவர்களால் சிருஷ்டிக்கப் பட்டிருந்தாலும் கூட அவை யாவும் காலத்தின் முன்பாக வெறும் குப்பையாகிவிடும். மக்களை நிராகரித்துவிட்டு எந்த ஒன்றும் இங்கே நிலைத்து நிற்க முடியாது. அத்தகைய மக்களுக்கான கவிதையை கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர்  தொடர்ந்து  படைத்துவருகிறார். ஆஸ்திரேலியாவில் சிட்னியில் வசிக்கும் கவிஞர் முனைவர் இரகுபதி சந்திரசேகர் அவர்கள்,  இதற்கு முன் இரண்டு , துடித்திடு துளிர்விடு என்னும் இரண்டு கவிதை நூல்களை எழுதியுள்ளார். இது போதும் என்று அத்தோடு நில்லாமல்,  தமிழின் மீது கொண்டுள்ள காதலினாலும்  சமூகத்தின் மீது கொண்டுள்ள அக்கரையாலும் தொடர்ந்து கவிதை எழுதி வருகிறார். அவர் தொடர்ந்து எழுதிய கவிதைகளைத் தொகுத்து     கன்னத்தில் குழி- ஓர் அழகிய மொழி என்னும்...