Boomi International Research Journal of Tamil
பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ்
ISSN: 3139– 1893
An International open Access, Peer- reviewed, Refereed Quarterly Journal
சர்வதேச கைம்பெண்கள் தின சிறப்பிதழ்
சமூகத்தில் கைம்பெண்கள்
- சர்வதேச கைம்பெண்கள் தினம் (International Widows Day) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 23 அன்று அனுசசரிக்கப்படுகிறது. கணவனை இழந்து, வறுமை மற்றும் சமூக புறக்கணிப்புக்கு உள்ளாகும் பெண்களின் நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும், 2010-ஆம் ஆண்டு முதல் ஐக்கிய நாடுகள் சபையால் இந்த சர்வதேச கைம்பெண்கள் அதிகாரப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
- உலகம் முழுவதும் சுமார் 258 மில்லியன் கைம்பெண்கள் உள்ளனர். அவர்களில் பலர் தீவிர வறுமை, தனிமைப்படுத்தல் மற்றும் சமூக அநீதிகளுக்கு ஆளாகின்றனர். கைம்பெண்களுக்குச் சொத்துரிமை, மறுவாழ்வு மற்றும் சமூகத்தில் கண்ணியமான வாழ்க்கை கிடைப்பதை உறுதி செய்தல் அவசியமாகிறது. இந்த அவசியத்தின் அடிப்படையில் சமூகத்தில் கைம்பெண்களை மேம்படுத்தும் நோக்குடனும், புரிந்துகொள்ளும் நோக்குடனும் பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ் சர்வதேச கைம்பெண்கள் தினத்தில் சமூகத்தில் கைம்பெண்கள் எனும் தலைப்பில் சிறப்பிதழ் ஒன்றை வெளியிட உள்ளது.
- பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் அனைவரும் தரமான ஆய்வுக் கட்டுரைகள் அளித்து நல் ஆதரவு தருமாறு பணிவோடு வேண்டுகிறோம்.
- காலாண்டு ஆய்விதழாக வெளிவரும் எங்களின் பூமி பன்னாட்டுத் தமிழ் ஆய்வு இதழ்(ISSN: 3139– 1893) என்னும் Peer review ஆய்விதழில் சர்வதேச கைம்பெண்கள் தினத்தன்று(ஜூன் 23, 2026) சமூகத்தில் கைம்பெண்கள் என்னும் சிறப்பிதழ் வெளியிட உள்ளோம். இதழுக்கான ஆய்வுக் கட்டுரைகளை வரவேற்கிறோம்.
- ஆய்வுக் கட்டுரைகள் உலக அளவில் உள்ள கைம்பெண்களைக் குறித்து அமையலாம். இலக்கியங்களில் கைம்பெண்கள், சமூகத்தில் கைம்பெண்கள் நிலை, கைம்பெண்கள் மேம்பாட்டில் அரசின் நலத்திட்டங்கள், கைம்பெண்கள் வாழ்வியல் மேம்பாட்டிற்குச் செய்யவேண்டுவன, கைம்பெண்களிடம் நேர்காணல் முதலிய கைம்பெண்கள் தொடர்பான அனைத்து பொருண்மைகளிலும் கட்டுரைகள் அமையலாம்.
- கட்டுரைகள் ஆய்வு நெறிப்படி யுனிக்கோடு எழுத்துருவில், புதிய களத்தில் புதிய நோக்கோடு எழுதப்படும் தரமான ஆய்வுக் கட்டுரைகளுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
- கட்டுரைகள் 6 முதல் 8 பக்கங்கள் வரை அமைதல் வேண்டும்.
- கட்டுரை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதலாம்.
- எங்கள் ஆசிரியர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே வெளியிடப்படும்.
- கட்டுரையாளர் பெயர் முகவரி(அலைப்பேசி, மின்னஞ்சல் அவசியம் பதிவிடவும்), ஆய்வுச்சுருக்கம், திறவுச்சொற்கள், கட்டுரை, துணைநூற்பட்டியல் ஆகியவை கட்டாயம் இடம்பெற வேண்டும்.
- கட்டுரைகளை editorsbirjt@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
- தாங்கள் கட்டுரையை மட்டும் மேலுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். கட்டுரை தேர்ந்தெடுக்கப்பட்டால் தங்களுக்குத் தெரிவிக்கப்படும். அதன் பிறகே வெளியீட்டுக் கட்டணம் செலுத்தவேண்டும்.
- ஆசிரியர்குழு தேர்ந்தெடுத்தக் கட்டுரைகள் மட்டும் இணையத்தில் வெளியிடப்பெறும். மற்றும் இதழ் பிரிண்ட் இதழாகவும் வெளியிடப்பெறும். இதழ் மற்றும் சான்றிதழ் கட்டணமாக, ஆய்வாளார்கள் ரூ. 650/- பேராசிரியர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் ரூ. 850/- யும் கட்டணமாக செலுத்தவேண்டும்.
- இதழையும், சான்றிதழையும் கூரியரில் பெற விரும்புவோர் கட்டணத்துடன் ரூ. 150/- சேர்த்து அனுப்பவும்.
- புலனக் குழுவில் இணைய https://chat.whatsapp.com/DcC86lnpXOY6Vf75p7ON3B
மேலும் தகவல் அறிய
இணையதளம் : www.boomiirjt.com
மின்னஞ்சல்: editorsbirjt@gmail.com
தொடர்பு எண்கள்: 9962660279, 8940872100
கருத்துகள்
கருத்துரையிடுக